100 வயதை கடந்த 999 வாக்காளர்கள்!

  ஸ்ரீதர்   | Last Modified : 04 May, 2019 03:48 pm
999-centenarians-to-cast-their-vote-in-himachal

ஹிமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள வாக்காளர்களில் 100 வயதை கடந்த 999 மூத்த வாக்காளர்கள் இம்மாதம் 19ம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் வாக்களிக்க உள்ளனர்.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய மாவட்டமான காங்கராவில் 100 வயதை கடந்த 293 பேர் வாக்களிக்க உள்ளனர். அடுத்ததாக ஹமிர்பூரில் 125 பேரும், மண்டி மாவட்டத்தில் 122 பேரும் லாஹீல் மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் வருகிற 19ம் தேதி வாக்களிக்க உள்ளனர். 

இதில் கின்னவுர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நெகி என்ற 100 வயது மூத்த வாக்காளர் 1951-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தனது முதல் வாக்கினை பதிவு செய்து  நாட்டின் முதல் வாக்காளர் என பெயர் பெற்றார்.

மேலும் மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் உள்ள 100 வயதுக்கு மேற்பட்டோர் மொத்தம் 999 பேர் வருகிற 19ம் தேதி வாக்களிக்க உள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையர் தேவேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close