காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த ஃபனி புயல்

  ஸ்ரீதர்   | Last Modified : 04 May, 2019 06:56 pm
not-much-damage-by-cyclone-fani-in-bengal


ஒடிசாவை சூறையாடி விட்டு நகர்ந்த ஃபனி புயல், அதி தீவிரத்தில் இருந்து தீவிரமாக வலு குறைந்து, இன்று மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்தது.

ஒடிசாவின் பாலசோர் வழியாகச் சென்று, மேற்கு வங்கத்தின் காரக்பூரில், அந்தப் புயல் கரையைக் கடந்தது. ஆனால் வேகம் குறைந்ததன் காரணமாக, பெரிய அளவிலான சேதத்தை அது ஏற்படுத்தவில்லை என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 ஃபனி புயல், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, வங்கதேச மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். புயல் கடந்து சென்றதைத் தொடர்ந்து புவனேஸ்வர், கொல்கத்தா விமான நிலையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close