பாஜக  தலைவர் சுட்டுக்கொலை : காஷ்மீரில் பரபரப்பு

  Newstm Desk   | Last Modified : 05 May, 2019 10:31 am
bjp-leader-shot-dead-in-south-kashmir

பாஜக தலைவர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு -காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்ட பாஜக துணை தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் குல் முகமது மிர். நவ்காம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் நேற்றிரவு புகுந்த பயங்கரவாதிகள், மிர்ரை சுட்டுக் கொன்றனர்.

மார்பிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்த நிலையில், உயிருக்கு போராடிய கொண்டிருந்த அவரை போலீஸார் மருத்துவமனையில் அனுமதிக்க முயன்றனர். இருப்பினும் அவர், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குல் முகமது மிர், கடந்த 2008 மற்றும் 2014 -ஆம் ஆண்டு, ஜம்மு -காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், தூர் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி இரங்கல்: பாஜக தலைவர் குல் முகமது மிர் கொலை சம்பவத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனமும், மிரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார்.

ஜம்மு -காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close