ஜார்க்கண்டில் ரயில் பெட்டி வடிவில் வாக்குச்சாவடி!

  ஸ்ரீதர்   | Last Modified : 05 May, 2019 11:21 am
unique-train-coach-look-makes-polling-booth-140-centre-of-attraction-in-hazaribagh

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மக்களவைத் தொகுதியில், திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, இத்தொகுதியின் துல்மி மண்டலத்திற்கு உட்பட்ட சடாக் கிராமத்தில், உயர்நிலைப் பள்ளி ஒன்றிலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 

இங்கு வாக்காளர்களை கவர்வதற்காக, ரயில் பெட்டி வடிவில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.  மிகவும் பின்தங்கிய கிராமமான இப்பகுதியைச் சேர்ந்த மக்களில் பலர், ரயிலையே இன்னும் பார்த்ததில்லை என்பதால், ரயில் பெட்டி வடிவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி வாக்காளர்களை வெகுவாக கவரும் என்று அப்பகுதி தேர்தல் அதிகாரி ஜெயசாந்தி தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close