கார் பள்ளத்தில் கவிழ்ந்து பாஜக தொண்டர்கள் 5 பேர் உயிரிழப்பு !

  ஸ்ரீதர்   | Last Modified : 05 May, 2019 06:55 pm
five-bjp-workers-die-as-car-falls-into-gorge-in-hp

ஹிமாச்சல பிரதேசத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்து பாஜக தொண்டர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் பக்திதாரில் நடைபெறும் அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தேர்தல் பேரணியில் கலந்து கொள்வதற்காக பாஜக தொண்டர்கள் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த பாஜக தொண்டர்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close