ஏழு மணி நேரம் ரயில் தாமதம்: விரக்தியில் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்கள் !

  ஸ்ரீதர்   | Last Modified : 05 May, 2019 07:01 pm
hundreds-miss-neet-exam-in-karnataka-as-train-runs-late

கர்நாடக மாநிலத்தில் ரயில் தாமதமாக வந்ததால் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வடகர்நாடகாவிலிருந்து பெங்களூருக்குச் வரும் ஹம்பி விரைவு ரயில் காலை 7 மணிக்கு பெங்களூருவுக்குச் வந்திருக்க வேண்டும். ஆனால், அந்த ரயில் 7 மணி நேரம் தாமதமாக பிற்பகல்  2.30 மணி அளவில் பெங்களூருவை வந்தடைந்தது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. சுமார் 13 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இன்று மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. 154 நகரங்களில் நடைபெற்ற நீட் தேர்வு மாலை 5 மணியளவில் முடிந்தது.

தேர்வு எழுதும் மாணவர்கள் 1.30 மணிக்கு முன்னதாக தேர்வு அறைக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால், கர்நாடகா மாநிலத்தில் ரயில் 7 மணி நேரம் தாமதமானதால் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போய்விட்டது.

இதனால் விரக்தியடைந்த மாணவர்கள் பலர் ட்விட்டர் மூலம், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு புகார் அளித்தனர். ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகியுள்ளது. மீண்டும் தேர்வு எழுத உதவ வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close