இந்திய வான்வழியில் அத்துமீறி நுழைந்த விமானம் : விமானிகளிடம் தீவிர விசாரணை!

  Newstm Desk   | Last Modified : 10 May, 2019 09:09 pm
iaf-sukhois-intercept-georgian-antonov-cargo-plane-trespassing-into-indian-territory-from-pakistan

பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டு, இந்திய வான்வழி எல்லைக்குள் அத்துமீறி பயணித்த ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த விமானம், ஜெய்ப்பூரில் இன்று தரையிறக்கப்பட்டது.

பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து டெல்லிக்கு,  ஜார்ஜியாவைச் சேர்ந்த ஏஎன் -12 ரக சரக்கு விமானம் இன்று மதியம் புறப்பட்டது. அந்த விமானம்,  இந்திய வான்வழி எல்லையை நெருங்கியதும், தனது வழக்கமான பயணப் பாதையில் இருந்து விலகி, வடக்கு குஜராத் பகுதிகளுக்குள் நுழைந்தது.

உடனே இந்திய விமானப் படையின் மிக் ரக போர் விமானம், இந்திய வான் எல்லைக்குள் பாதை மாறி பயணித்துக் கொண்டிருந்த  ஏஎன் -12 ரக விமானத்தை இடைமறித்து, அதனை ஜெய்ப்பூர் விமானத் தளத்தில் தரையிறக்கியது.

இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது குறித்து, அந்த விமானத்தின் விமானிகள் மற்றும் பணியாளர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close