ஜம்மு-காஷ்மீர்- கரடி தாக்கி முதியவர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 11 May, 2019 03:23 pm
jammu-60-year-old-man-killed-in-attack-by-wild-bear-in-poonch

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதியவர் ஒருவரை கரடி தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூன்ச் மாவட்டத்தில் உள்ள கலிகல்பான் என்ற கிராமத்தில்  60 வயது முதியவர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அருகே இருந்த வனப்பகுதியில் இருந்து திடீரென வெளி வந்த கரடி முதியவரை பயங்கரமாக தாக்கியுள்ளது. இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close