வெடிப்பொருட்கள் வெடித்து சிதறிய விபத்தில் 3 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 12 May, 2019 04:39 pm
3-killed-in-explosion-in-jharkhand

ஜார்கண்ட் மாநிலத்தில் வெடிப்பொருள்கள் வெடித்து சிதறிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பத்மாம்தன்ந் பிரமசய்யா என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் இருந்து வெடிப்பொருட்களை இறக்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிப்பொருட்கள் வெடித்து சிதறன.

இதில் அங்கிருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த தீக்காயமடைந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கிணறு வெட்டுவதற்காக அந்த வாலிபர் வெடிப்பொருட்களை வாங்கி வரும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close