கேரளா- பூரம் திருவிழாவில் இன்று யானைகள் அணிவகுப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 13 May, 2019 02:00 pm
pooram-festival-begins-in-kerala

கேரள மாநிலம் திருச்சூரில் புகழ் பெற்ற பூரம் திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. 

இந்த திருவிழாவில் கேரள செண்டி மேளம் முழங்க,  இன்றும், நாளையும் யானைகள் ஊர்வலம் மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதையடுத்து திருச்சூர் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் தெக்கின்காடு மைதானத்தில் கூடுவார்கள்.

மிகவும் உயரமான 10 அடி உயரம் கொண்ட தென்சிக்கோட்டு ராமசந்திரன் என்ற யானை தான் பூரம் விழாவில் தலைமை தாங்கும். 54 வயதான இந்த யானை கடந்த பிப்ரவரி மாதம் 2 பேரை மிதித்து கொன்றது.

இதையடுத்து பூரம் விழாவில் பங்கேற்க ராமசந்திரன் யானைக்கு அரசு தடை விதித்தது. இதையடுத்து யானை உரிமையாளர்கள் போரட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் யானை ராமசந்திரனுக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர உடல் பரிசோதனை செய்து யானை நலமுடன் நல்ல நிலைமையில் இருப்பதாக சான்றிதழ் வழங்கினர்.

இதையடுத்து நேற்று செண்டை உள்ளிட்ட வாத்தியங்கள் முழுங்க நேத்திலாக்காவு பகவதி அம்மன் சிலை ஏற்றப்பட்டு ராமசந்திரன் யானை கோவிலில் இருந்து வெளியே வந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close