ஸ்ரீநகரில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதி கைது

  ஸ்ரீதர்   | Last Modified : 14 May, 2019 01:07 pm
delhi-police-nab-absconding-jaish-militant-from-srinagar

ஜெய்ஸ் இ  முகமது தீவிரவாத இயக்கத்தின் முக்கிய நபரை டெல்லி போலீசார் ஸ்ரீநகரில் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் முக்கிய வழக்கில் தொடர்புடைய ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முக்கிய நபர் காஷ்மீரில் பதுங்கியிருப்பதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து டெல்லி போலீசார் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பதுங்கியிருந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த அப்துல் மஜீத் பாபா என்பவரை சபோர் மாவட்டம் மக்ரபுரா என்ற இடத்தில் கைது செய்தனர்.

அவரை இன்று ஸ்ரீநகர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக டெல்லி கொண்டு வர உள்ளதாக டெல்லி சிறப்பு போலீஸ் படை துணை சூப்பிரண்டு சஞ்சீவ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். 

மேலும் கைது செய்யப்பட்டுள்ள அப்துல் மஜீத் பாபாவை பற்றி துப்பு கொடுத்தால் 2 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close