கணவர் குடும்பத்தினரின் கொடுமையால் நிர்வாணமாக நடந்து சென்று புகார் அளித்த பெண்

  ஸ்ரீதர்   | Last Modified : 14 May, 2019 01:30 pm
rajasthan-woman-walks-up-to-police-station-naked-to-report-harassment

ராஜஸ்தான் மாநிலத்தில் கணவரின் வீட்டாரால் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் நிர்வாணமாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மஹாராஷ்டிர மாநித்தை சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்திற்கு பின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு மாவட்டத்தில், பிட்சார் என்ற பகுதியில் கணவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கணவர் அசாம் மாநிலத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கணவர் வீட்டில் இல்லாத போது அவரது மாமியார் மற்றும் நாத்தனார் தொடர்ந்து அந்த பெண்ணை துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. மேலும் அந்த பெண்ணின் உடைகளை கிழித்தும் அடித்து உதைத்தும் உள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண் கணவர் வீட்டினரின் கொடுமை பொருக்கமுடியாமல் நிர்வாணமாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு நடந்தே சென்று புகார் அளித்துள்ளார். அந்த பெண் வரும் வழியில் அவருக்கு உதவாமல் பலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிது.

இந்நிலையில் அந்த பெண் கொடுத்த புகாரின்  பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் கணவர் வீட்டினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் அந்த பெண் நடந்து வந்த பாதையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து நடந்து வந்த அந்த பெண்ணை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close