ஒடிசா- வாகனங்களுக்கு தீ வைத்த மாவோயிஸ்டுகள்

  ஸ்ரீதர்   | Last Modified : 15 May, 2019 06:01 pm
maoists-set-vehicle-on-fire-releases-poster-to-oppose-road-construction-in-odisha

ஒடிசாவில் சாலை அமைக்கப்படுவதை எதிர்த்து அங்கிருந்த வாகனங்களை மாவோயிஸ்டுகள் தீ வைத்து எரித்துள்ளனர்.

ஒடிசாவில் உள்ள கலஹாண்டி மாவட்டத்தில் உள்ள பனிமுண்டா கிராமத்தில், பிரதம மந்திரி சாலை யோஜனா திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இதற்கு அங்குள்ள மாவோயிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சாலை அமைக்கும் பணி நடைபெறும் இடத்திற்கு வந்த மாவோயிஸ்டுகள் அங்கிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற கூடாது என்றும் அப்படி நடந்தால் இது போன்ற சம்பவங்கள் தொடரும் என எழுதப்பட்ட போஸ்டர்களை அங்கு விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close