திருமண விழாவில் நடனமாடிய மனைவியை ஆத்திரத்தில் கொன்ற கணவன்!

  ஸ்ரீதர்   | Last Modified : 15 May, 2019 06:05 pm
man-in-bihar-kills-wife-for-dancing-at-wedding-ceremony

திருமண விழாவில் நடனமாடிய மனைவியை ஆத்திரத்தில் கணவன் கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரை சேர்ந்தவர் மாஞ்சி. இவரது மனைவி முனியா தேவி. இந்நிலையில் முனியா தேவி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக பாட்னாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கடந்த 10 நாட்களுக்கு முன் வந்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் முனியா தேவியின் கணவர் மாஞ்சி திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தனது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் முனியா தேவி மற்றும் அவரது கணவர் உள்பட அவரது குடும்ப உறவினர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் முனியா தேவி நடனமாடியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த கணவன் மாஞ்சி, தனது மனைவி முனியாவிடம் பொது இடத்தில் நடனமாடதே என்று கூறியுள்ளார். ஆனால் முனியா தொடர்ந்து நடனமாடியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாஞ்சி முனியாவை தனியான இடத்திற்கு பிடித்து இழுத்துச்சென்று அடித்து உதைத்து பின்னர் கழுத்தை நெறித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த உறவினர்கள் யாரும் கவனிக்கவில்லை.

முனியா மயக்கமடைந்ததாக எண்ணிய மாஞ்சி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து அந்த வழியாக வந்த சிலர் முனியா கீழே விழுந்துள்ளதை பார்த்தை அதிர்ச்சியடைந்தனர்.

உடனே முனியாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தலைமறைவான மாஞ்சி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close