பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பாஜக தொண்டர்கள் படுகாயம் !

  ஸ்ரீதர்   | Last Modified : 16 May, 2019 11:43 am
himachal-pradesh-7-bjp-workers-injured-after-bus-overturns-in-kullu-district

ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாஜக தொண்டர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குலு மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்றில் 45 பாஜக தொண்டர்கள் சென்று கொண்டிருந்தனர்.நாக்நி கிரமாம் அருகே பஞ்சார் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close