அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- 25 பேர் பத்திரமாக மீட்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 16 May, 2019 11:38 am
25-people-saved-as-fire-breaks-out-at-residential-building-in-pune

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சன்வீர்பேத் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சாம்பல் நிறத்தில் புகை வெளியேறியது.

இதனால் அப்பகுதியே புகை மண்டலமானது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவினர் குடியிருப்பில் சிக்கியிருந்த 25 பேரை பத்திரமாக வெளியேற்றினர்.

மேலும் குடியிருப்புக்குள் யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close