அசாம் மாநிலத்தில் முக்கிய கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த உல்பா பயங்கரவாதிகள் 3 பேர் போலீசாரிடம் சரணடைந்தனர்.
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பார்துசோமா காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் கலிதா உல்பா பயங்கரவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்தியா மியான்மர் எல்லையோரம் உல்பா பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் மற்றும் சிஆர்பிஎப் துணை ராணுவ படை ஆகியோர் கூட்டாக தராணி என்ற அடர்ந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.
அப்போது காவல் ஆய்வாளர் பாஸ்கர் கலிதா கொலையில் தொடர்புடைய உல்பா பயங்கரவாதிகள் 3 பேர் போலீசாரிடம் ஆயுதங்களோடு சரணடைந்தனர்.
newstm.in