விரும்பிய கோர்ஸை படிக்க அனுமதிக்காத அப்பாவுக்கு மகள் செய்த கைமாறு!

  கிரிதரன்   | Last Modified : 16 May, 2019 09:06 pm
girl-calls-childline-number-after-dad-hides-academic-proofs-both-disagreed-on-choice-of-degree

தான் விரும்பிய பட்டப்படிப்பை படிக்க அனுமதிக்காத தந்தை மீது மகளே புகார் அளித்துள்ள அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

சென்னை, ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர், இதழியலில் (ஜெர்னலிசம்) இளநிலைப் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று அவரது விருப்பத்தை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

 ஆனால், அந்த மாணவி வேதியியலில் பட்டப்படிப்பு முடித்து ஆசிரியை ஆக வேண்டும் என்பதே அவரது தந்தையின் விருப்பமாக இருந்துள்ளது.
இதுதொடர்பாக, தந்தைக்கு, மகளுக்கும் வாக்குவாதம் நடத்துள்ளது. இதனால் கோபமடைந்த தந்தை, மாணவியின் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை தன்வசமே எடுத்து வைத்துள்ளார்.

சான்றிதழ்கள் இல்லாததால் கல்லூரி பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க இயலாமல் இருந்த மாணவி, இந்த விவகாரம் குறித்து சிறுவர், சிறுமியருக்கான உதவி எண்ணில் (1098) புகார் அளித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து விஷயம் போலீஸுக்கு போகவே, தந்தை, மகள் இருவரையும் அழைத்து போலீஸார் சமாதானம் பேசியுள்ளனர். இதையடுத்து, மாணவியின் சான்றிதழை திரும்பத் தர அவரது தந்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

தான் விரும்பிய படிப்பை படிக்க ஒப்புக் கொள்ளாததால், தன் தந்தையின் மீதே மகள் புகார் அளித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close