இந்து பெண்ணின் பிரசவத்துக்கு உதவிய முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர் ...

  ஸ்ரீதர்   | Last Modified : 16 May, 2019 06:27 pm
muslim-auto-driver-takes-pregnant-hindu-woman-to-hospital-disobeys-curfew-in-assam

அசாம் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த இந்து பெண்ணிற்கு ஒரு முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர் உதவி செய்துள்ளது நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கலவரத்தால் அம்மாநிலத்தின் ஹைலிகாண்டி பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் ரூபன் தாஸ் என்பவரது மனைவி நந்திதா என்பவர் பிரசவ வலியால் துடித்துள்ளார்.

இதையடுத்து ரூபன் தாஸ் ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளார். ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தொலைபேசி எடுக்கப்படவில்லை. இந்நிலையில் என்ன செய்வது என்று தவித்த ரூபன் தாசுக்கு ஆறுதலாக ஒரு குரல் கேட்டது. அது அருகில் உள்ள வீட்டில் வசித்து வரும் மக்பூல் என்ற ஆட்டோ ஓட்டுநர் ரூபன் தாசின் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முன் வந்துள்ளார்.

இதையடுத்து மருத்துவமனையில் நந்திதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சாந்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த ஹைலிகாண்டி மாட்ட இணை ஆணையர் கீர்த்தி ஜாளி, ரூபன் வீட்டிற்கு நேரில் சென்றார்.

அப்போது அவர்களது குழந்தையை வாங்கி கொஞ்சிய கீர்த்தி ஜாளி, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாகும். ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதும் அதை பற்றி கவலைப்படாத ஆட்டோ ஓட்டுநர் மக்பூல் நந்திதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றது மனித நேயம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியாகும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close