ராணுவ வேட்டை : பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 17 May, 2019 11:09 am
jammu-and-kashmir-six-terrorist-encounter

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புல்வாமா மாவட்டம், திலிபோரா பகுதியில் ஜெய்ஷ் -இ- முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக நேற்றிரவு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.

அதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர் மற்றும் பொதுமக்களில் ஒருவரும் இந்தத் தாக்குதலில் பலியாகினர்.

இதேபோன்று, சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close