போதைப் பொருட்களை கடத்த முயன்ற 5 பேர் கைது

  ஸ்ரீதர்   | Last Modified : 17 May, 2019 12:05 pm
five-held-with-doda-post-drugs-worth-rs-1-crore-from-meerut-karnal-highway

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் கர்நால் தேசிய நெடுஞ்சாலையில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கேரட்டா என்ற கிராமத்தின் அருகே உள்ள ஒரு தாபாவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் பேரில் போலீசார் அந்த லாரியை சோதனை செய்தனர்.

அப்போது லாரியில் இரண்டாயிரம் கிலோ எடையுள்ள, 1 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து லாரியில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் மாருதி கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல்காரர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகருக்கு போதைப் பொருட்களை கடத்தி செல்ல முயன்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close