லாரி மீது கார் மோதி விபத்து- 6 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 17 May, 2019 02:33 pm
6-killed-in-road-accident-in-up-s-deoria

உத்தரப் பிரதேசத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், தியோரியா என்ற பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பரை பார்த்துவிட்டு 7 பேர் தங்கள் சொந்து ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, பைரோனா என்ற கிராமம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close