உ.பி: டிராக்டர் மீது பேருந்து மோதி 5 பேர் பலி!

  ஸ்ரீதர்   | Last Modified : 18 May, 2019 10:12 am
up-5-dead-over-30-injured-after-bus-rams-into-tractor-trolley-on-lucknow-agra-expressway

உத்தரப்பிரதேச மாநிலத்தில் டிராக்டர் டிராலி மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ- ஆக்ரா விரைவு நெடுஞ்சாலையில் உன்னவ் மாவட்டத்தில், முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் டிராலி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த 30 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களில் லக்னோ- ஆக்ரா விரைவு நெடுஞ்சாலையில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close