குஜராத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு... தண்ணீரை வீணடித்தால் அபராதம் !

  டேவிட்   | Last Modified : 20 May, 2019 08:18 am
fine-for-wasting-water-in-gujarat

தமிழ்நாட்டைப் போலவே, குஜராத் மாநிலத்திலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால், தண்ணீரை வீணடிப்பவர்களுக்கு 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்க அம்மாநில நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

குஜராத் மாநிலத்திலும் வறட்சி நிலவுவதால், டகோத் நகரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், அணை நீர்மட்டம் குறைந்து காணப்படுவதால், நகர மக்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீரை வீணடிப்பவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 வார்டு குழு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் சோதனை சோதனை நடத்தி, தண்ணீரை வீணடிப்பவர்களிடம் அபராதம் வசூலிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அபராதத்திற்குப் பின் மீண்டும் அதே தவறை செய்தால், வீட்டு தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close