டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே துப்பாக்கி சூடு- 2 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 20 May, 2019 11:09 am
2-shot-dead-inside-car-in-busy-traffic-in-delhi-gang-war-police

தென் மேற்கு டெல்லியில் உள்ள துவார்கா மோட் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இரண்டு கும்பல்களுக்கு  இடையே நேற்று பட்டப்பகலில், சாலை நெரிசல் மிக்க பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட பர்வீன் கெலோட் மற்றும் விகாஸ் தலால் என்ற இருவரின் மீது டெல்லி மற்றும் ஹரியானாவில் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

நேற்று, மாலை 4 மணி அளவில், பர்வீன் கெலோட் சென்று கொண்டிருந்த காரை, இன்னொரு கார் மூலம் சிலர் வழிமறித்தனர். திடீரென்று கெலோட் இருந்த கார் மீது சரமாரியாக, இன்னொரு கும்பல் சுட ஆரம்பித்துள்ளது.

துப்பாக்கி சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீதும் போலீசார், பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறுப்படுகிறது. 

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மேலும் இருவர், தப்பியோடிவிட்டனர். தப்பித்துச் சென்ற நபர்கள் யார் என்பதை கண்டுபிடித்து விட்டதாகவும், அவர்களைப் பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close