போதை பொருள் கடத்தி வந்த நைஜீரியர்கள் 4 பேர் கைது

  ஸ்ரீதர்   | Last Modified : 20 May, 2019 05:46 pm
4-nigerian-nationals-held-with-cocaine-worth-rs-2-4-lakh

கோகைகன் போதை பொருளை கடத்தி வந்ததாக நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை கோரேகன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் வழிமறித்து நிறுத்தினர்.

காரில் பயணம் செய்த நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தடை செய்யப்பட்ட கோகைன் போதை பொருட்கள் வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 கிராம் எடையுள்ள இரண்டரை லட்சம் மதிப்புள்ள கோகைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close