ஜம்மு காஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை!

  ஸ்ரீதர்   | Last Modified : 21 May, 2019 05:22 pm
encounter-underway-in-j-k-s-shopian

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி நுழைந்து எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சோபியான் மாவட்டத்தில் உள்ள யார்வான் வனப்பகுதியில் தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த துப்பாக்கி சண்டையில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. இதையடுத்து சண்டை நடந்து வரும் பகுதியில் கூடுதல் படைகள் விரைந்துள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close