உ.பி. சிறுவனை கடத்திய கார் ஓட்டுநர் தற்கொலை

  ஸ்ரீதர்   | Last Modified : 22 May, 2019 10:41 am
driver-who-abducted-child-dies-after-shooting-himself

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுவனை கடத்திய முன்னாள் கார் ஓட்டுநர் போலீசாரை பார்த்ததும் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபரின் முன்னாள் கார் ஓட்டுநர் பள்ளியில் இருந்த தொழிலதிபரின் மகனை கடத்தினார்.

பின்னர் தொழிலதிபருக்கு தொலைபேசியில் அழைத்த அந்த ஓட்டுநர் சிறுவனை விடுவிக்க வேண்டுமானால் தனக்கு 3 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என்றார்.

இது குறித்து தொழிலதிபார் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பதோகி பகுதியில் பதுங்கியிருந்த கார் ஓட்டுநரை போலீசார் கண்டு பிடித்தனர்.

போலீசார் வருவதை பார்த்த கார் ஓட்டுநர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கிருந்த சிறுவனை போலீசார் பத்திரமாக மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close