ஒடிசா- இரண்டு மனைவிகளை கொன்று கணவர் தற்கொலை

  ஸ்ரீதர்   | Last Modified : 22 May, 2019 03:45 pm
tribal-man-commits-suicide-after-killing-two-wives

ஒடிசா மாநிலத்தில் இரண்டு மனைவிகளை கொன்று விட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள தடிகிசோல் கிராமத்தை சேர்ந்தவர் ஷியாமா மராண்டி. இவருக்கு பூல்மானி மராண்டி மற்றும் சால்கு மராண்டி என்ற இரண்டு மனைவிகள் உண்டு.

ஷியாமா மராண்டிக்கும் அவரது இரண்டு மனைவிகளுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவும் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஷியாமா மராண்டி தனது இரு மனைவிகளையும் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் தானும் அருகில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close