நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்

  ஸ்ரீதர்   | Last Modified : 26 May, 2019 10:26 am
docs-remove-spoons-toothbrushes-screwdrivers-from-man-s-stomach

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நாேயாளியின் வயிற்றிலிருந்து 7 கரண்டிகள், 2 ஸ்குருரவைர்கள் உள்பட பல பாெருட்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

ஹிமாச்சல பிரதேசம் மண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து அவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றுக்குள் சில வித்தியாசமான பொருட்கள் இருப்பதை பார்த்தனர்.

இந்நிலையில் அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நோயாளியின் வயிற்றில் இருந்து 7 கரண்டிகள், 2 ஸ்குரு டிரைவர்கள், 2 பல்துலக்கும் பிரஷ், ஒரு இரும்பு கம்பி மற்றும் ஒரு கத்தியை மருத்துவர்கள் அகற்றினர்.

அந்த நோயாளி அபாய கட்டத்தில் இருப்பதாகவும் அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close