பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது

  ஸ்ரீதர்   | Last Modified : 26 May, 2019 12:44 pm
modi-cave-set-to-be-spiritual-hub

கேதார்நாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்த குகையை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 18ம் தேதி கேதார்நாத்தில் உள்ள குகையில் 17 மணிநேரம் தியானத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த குகைக்கு மோடி குகை என்ற பெயர் சூட்டப்பட்டது.

தற்போது அந்த குகையை காண சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். இதையடுத்து அந்த குகையை சுற்றுலா தலமாக அறிவிக்க உத்தரகாண்ட் அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி 3 ஆயிரம் ரூபாயாக இருந்த குகையின் வாடகை 990 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் குகையில் உள்ள ஜன்னல் வழியாக பார்த்தால் கேதார்நாத் கோவிலை தரிசிக்கும் விதமாக அமைந்துள்ளது என்றும் அங்கு தங்குவதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close