பாஜக தலைவர்களை சந்தித்து நடிகை சுமலதா ஆசி பெற்றார்

  ஸ்ரீதர்   | Last Modified : 26 May, 2019 02:10 pm
mandya-mp-sumalatha-ambareesh-meets-bjp-leader-sm-krishna

கர்நாடக மாநிலத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா இன்று பாஜக தலைவர்கள் எஸ்எம்.கிருஷ்ணா மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதியிலிருந்து நடிகர் அம்பரிஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை விட ஒன்றரை லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் நடிகை சுமலதா இன்று பாஜக தலைவர்கள் எஸ்எம்.கிருஷ்ணா மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது மூத்த பாஜக தலைவர்களும் உடனிருந்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close