மம்தாவிற்கு 'ஜெய்ஸ்ரீராம்' என்று எழுதிய 10 லட்சம் அட்டைகளை அனுப்ப பாஜக முடிவு!

  ஸ்ரீதர்   | Last Modified : 02 Jun, 2019 12:36 pm
bjp-says-will-send-10-lakh-jai-shri-ram-post-cards-to-mamata-banerjee

ஜெய்ஸ்ரீராம் என்று சொன்னதற்கு 10 பேரை மம்தா கைது செய்தார், தற்போது அவருக்கு ஜெய்ஸ்ரீராம் என்று எழுதப்பட்ட 10 லட்சம் தபால் அட்டைகளை அனுப்ப உள்ளோம் என்று பாஜக எம்.பி அர்ஜுன் சிங் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பராக்பூர் தொகுதியின் பாஜக எம்.பியான அர்ஜீன் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது மம்தாவை பார்த்து ஜெய்ஸ்ரீராம் என்று சொன்ன பாஜக தொண்டர்கள் 10 பேரை மம்தா கைது செய்தார்.

தற்போது நாங்கள் அவருக்கு 'ஜெய்ஸ்ரீராம்' என்று எழுதப்பட்ட 10 லட்சம் தபால் அட்டைகளை அனுப்ப உள்ளோம். முடிந்தால் அவர் பத்து லட்சம் பேரை கைது செய்து பார்க்கட்டும் என்று சவால் விட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close