விலங்குகளையும் 8 மணி நேரம் தான் வேலை வாங்க வேண்டும் : ஹரியானா நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  ஸ்ரீதர்   | Last Modified : 02 Jun, 2019 05:32 pm
animals-are-legal-persons-all-citizens-their-guardians-says-hc

பறவைகளுக்கும், கால்நடைகளுக்கும் மனிதர்கள் தான் காவலர்கள். அதனால் மனிதர்களை போலவே கால்நடைகளுக்கும் சமஉரிமை உண்டு என்று ஹரியானா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து ஹரியானாவிற்கு 29 மாடுகள் மிக நெருக்கமாக கட்டப்பட்டு லாரியில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பான புகைப்படத்தை சுட்டிக்காட்டி ஒருவர் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜீவ் ஷர்மா அளித்துள்ள தீர்ப்பில், " பறவைகள், கால்நடைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு மக்களாகிய நாம் தான் பாதுகாவலர்கள். அவற்றுக்கும் மனிதர்களை போலவே சமஉரிமை உள்ளது. கோடை காலங்களில் மாடுகளை கொண்டு வண்டிகளை இயக்கும்போது அவற்றிற்கு போதிய தண்ணீர் மற்றும் உணவு வழங்க வேண்டும். மேலும் மனிதர்களை போலவே மாடுகளை 8 மணி நேரமே வேலை வாங்க வேண்டும். 5 மணிநேரத்திற்கு பிறகு அவற்றுக்கு உணவு வழங்கி போதிய ஓய்வு தர வேண்டும்" என நீதிபதி தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close