லத்தியை புல்லாங்குழலாக மாற்றிய காவலர்!

  ஸ்ரீதர்   | Last Modified : 02 Jun, 2019 05:16 pm
karnataka-cop-turns-lathi-into-flute-to-play-folk-songs

கர்நாடகாவில் காவலர் ஒருவர் லத்தியை (தடி) புல்லாங்குழல் போல் வாசித்து காட்டி உயரதிகாரியின் பாராட்டை பெற்றுள்ளார்.

கர்நாடக மாநிலம், ஹூப்ளி ஊரக காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் சந்திரகாந்த். 52 வயதான இவருக்கு சங்கீதம் மீது அதிக ஆர்வம் உண்டு.

தனது ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதத்தில், இவர் தனக்கு வழங்கப்பட்ட பைபர் லத்தியை புல்லாங்குழல் போல் வாசிக்க ஆரம்பித்தார். இதுகுறித்து அறிந்த பெங்களூரு நகர ஏடிஜிபி பாஸ்கர் ராவ், தலைமை காவலர் சந்திரகாந்தை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும் அவருக்கு ரொக்கப்பரிசு வழங்கினார்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close