19  மாணவிகளை நாசமாக்கிய ஆசிரியர் கைது!

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2019 06:57 pm
kerala-madrasa-teacher-held-for-sexually-harassing-19-students

கேரள மாநிலத்தில், மதாரஸாவில் பயில வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கேரள மாநிலம். அலுவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் யூசப். 63 வயதான இவர், கோட்டயம் மாவட்டத்துக்குள்பட்ட தலையோலபரம்பு எனுமிடத்தில் ஒரு மசூதியின் வளாகத்துக்குள் அமைந்துள்ள பள்ளியில் (மதாரஸா) ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

அங்கு பாடம் படிக்க வரும் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வருவதாக யூசஃப்  மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த இரண்டாண்டுகளில் இவர், 19 மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், மதாரஸா அமைந்துள்ள வளாகத்தின் உள்ளேயே, தமக்காக தனி அறை வசதியையும் மசூதி நிர்வாகத்திடமிருந்து யூசஃப் கேட்டு பெற்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து யூசஃப்பை இன்று கைது செய்த போலீஸார், அவரை சிறையில் அடைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close