ஜம்மு காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

  ஸ்ரீதர்   | Last Modified : 03 Jun, 2019 11:09 am
two-militants-killed-in-a-shootout-in-j-k-s-shopian

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினர் மூலு சித்ரகாம் என்ற இடத்தில் வாகன சோதனை சாவடி அமைத்திருந்தனர். இன்று அதிகாலை அந்த வழியாக வந்த ஒரு வாகனம் ,சோதனை சாவடியில் நிற்காமல் சென்றது. இதையடுத்து இந்திய ராணுவம் அந்த வாகனத்தை விரட்டி சென்றது.

இந்நிலையில், அந்த வாகனத்தில் இருந்து இறங்கிய தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதற்கு இந்திய ராணுத்தினரும் தக்க பதிலடி தந்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்ற தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close