மம்தா பானர்ஜி ராக்ஷசர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்- சாக்ஷி மகராஜ் பேட்டி!

  ஸ்ரீதர்   | Last Modified : 03 Jun, 2019 11:27 am
mamata-belongs-to-family-of-demons-sakshi-maharaj

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ராக்ஷசர்கள் குடும்பத்தை சேர்ந்தவர் என்று பாஜக எம்பி சாக்ஷி மகராஜ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் தொகுதியின் பாஜக எம்பி சாக்ஷி மகராஜ். இவர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், மேற்கு வங்க மாநில முதல்வர் ராக்ஷசர்கள் வம்சத்தைச் சேர்ந்தவர் என்றார். பண்டைய காலத்தில் ஹிரன்யகசிபு என்ற அரசர் கடவுள் பக்தியுள்ள தனது மகன் பிரகலாதனை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தார்.

அதை போலவே மம்தா பானர்ஜியும் ஜெய்ஸ்ரீராம் என்று சொல்பவர்களை சிறையில் அடைத்து வருகிறார். எனவே அவரும் ஹிரன்யகசிபு போன்ற ராக்ஷசர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர் என்று இதன் மூலம் தெரிய வருகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close