அரவிந்த் கெஜ்ரிவால் மக்களை ஏமாற்ற நினைக்கிறார்- பாஜக தலைவர் மனோஜ் திவாரி தாக்கு

  ஸ்ரீதர்   | Last Modified : 03 Jun, 2019 03:53 pm
manoj-tiwari-on-kejriwal-s-decision-to-make-metro-bus-rides-free-for-women

தனக்கு ஏற்பட்டுள்ள பயம் காரணமாகவே டெல்லி மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார் என்று பாஜக தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அரசுப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் அனைத்து பெண்களுக்கும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், இந்த திட்டம் இன்னும் 3 மாதங்களில் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் மனோஜ் திவாரி, பெண்களின் பாதுகாப்புக்கு என்று அறிவித்துள்ள  டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கடந்த 52 மாதங்களாக என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மக்களை எப்படி ஏமாற்றலாம் என்ற எண்ணத்தில் தான் அரவிந்த கெஜ்ரிவால் இது போல அறிவுப்புகளை வெளியிடுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close