காணாமல் போன விமானத்தின் சிதறிய பாகங்கள் கண்டுபிடிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 03 Jun, 2019 06:06 pm
wreckage-of-the-missing-indian-air-force-an-32-aircraft-has-been-reportedly-found

காணாமல் போன இந்திய விமானப்படையின் விமானத்தின் சிதறிய பாகங்கள் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக போா் விமானம் இன்று பகல் 12.25 மணிக்கு அசாம் மாநிலம், ஜோா்ஹட் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டது. மிகவும் சிறிய அளவிலான இந்த விமானத்தில் 5 பயணிகள் உள்பட 13 போ் பயணித்துள்ளனா். 

இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் மென்சுகா என்ற வான் பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் போர் விமானங்கள் ஈடுபட்டன. இந்நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பாயும் என்ற கிராமத்தில் விமானத்தின் சிதறிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close