கேரளாவில் இளைஞருக்கு நிபா வைரஸ் - சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி

  ஸ்ரீதர்   | Last Modified : 04 Jun, 2019 10:21 am
kerala-man-23-infected-with-nipah-confirms-government

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கிய இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நிபா வைரஸ் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதராத்துறை அமைச்சர் கே.கே ஷைலஜா தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் தாக்கி 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் 23 வயது இளைஞர் கடுமையான காய்ச்சலால் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவர்கள் அவரது ரத்த மாதிரியை சோதனை செய்ததில் அவருக்கு நிபா வைரஸ் தாக்கியுள்ளது உறுதியாகியுள்ளது. அவருக்கு சிகிச்சையளித்து வந்த 2 செவிலியர்கள் உள்பட 52 பேர் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிபா வைரஸ் விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் என்றும் அதன் மூலம் பரவும் தன்மையுடையது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் தாக்கியுள்ளது உறுதியாகியுள்ளது என்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்காக எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close