எனது தந்தையின் ஆட்சியை விட சிறப்பான ஆட்சியை தருவேன்- ஜெகன் மோகன் ரெட்டி உறுதி

  ஸ்ரீதர்   | Last Modified : 04 Jun, 2019 11:56 am
will-try-to-serve-andhra-pradesh-better-than-my-father-chief-minister-jaganmohan-reddy

தனது தந்தையின் ஆட்சியை விட சிறப்பான ஆட்சியை தருவேன் என்று ஆந்திராவில் புதிய முதல்வராக பதவி ஏற்ற ஜெகன்மோகன் ரெட்டி கூறி உள்ளார். 

சமீபத்தில் மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூரில் இஸ்லாமியர்கள் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெகன் மோகன் ரெட்டி இஸ்லாமியர்களுடன் இணைந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு பின்னர் அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினார்.

பின்னர் பேசிய அவர், 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 67 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால் தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சூழ்ச்சி செய்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 எம்.எல்.ஏ.க்களையும், 9 எம்.பி.க்களையும் விலைக்கு வாங்கினார்.

ஆனால் இந்த வருடம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 இடங்களையும், மக்களவைத் தேர்தலில் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. சூழ்ச்சி செய்தால் கிடைக்கும் பலன் குறித்து இதன் மூலம் அறிய முடியும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தான் தனது தந்தையை போன்று ஆந்திர மாநிலத்திற்கு சிறந்த ஆட்சியை வழங்க முயற்சிப்பதாக தெரிவித்தார். மேலும், ஊழல் புரிந்த குற்றவாளிகளை ஒருபோதும் தப்பவிடமாட்டோம் என உறுதி அளித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close