மேற்குவங்கம்- தனித்திருக்கும் பெண்களை சித்தரைவதை செய்து கொலை செய்யும் சைக்கோ பிடிபட்டான்!

  ஸ்ரீதர்   | Last Modified : 04 Jun, 2019 11:49 am
serial-killer-arrested-by-police-in-west-bengal

மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்தடுத்து பெண்களை கொலை செய்து வந்த சைக்கோ கொலையாளி போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

மேற்கு வங்க மாநிலத்தில் கிழக்கு புர்துவான் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கொடூரமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வந்தனர். கொலையான பெண்கள் அனைவரும் தலையில் கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால் கொலை செய்யப்பட்ட இடங்களில் பெண்களிடம் பாலியல் வன்புணர்வு மற்றும் அந்த வீடுகளில் திருட்டு முயற்சி போன்றன எதுவும் நடைபெற்றதற்கான சாட்சியங்கள் ஏதும் போலீசாருக்கு கிட்டவில்லை. எனவே, தனித்திருக்கும் பெண்களை, சித்ரவதை செய்து கொலை செய்வதை வேடிக்கையாக்கொண்டிருக்கும் மனநோயாளி  ஒருவன் இத்தகைய கொலைகளைச் செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதினர்

இதையடுத்து தனித்து திரியும் நபர்களை இலக்காக வைத்து போலீசார் தீவிர  கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் சிவப்பு தலைகவசம் அணிந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீஸ் நிலையம் அழைத்து சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில் அடுத்தடுத்து பெண்களை கொடூரமாக கொலை செய்தது அந்த நபர் தான் என்றும் அவரது பெயர் கமருசமான் சர்கார் என்பதும் தெரியவந்தது. பெண்கள் தனியாக உள்ள வீட்டில் டிப்டாபாக உடையணிந்து மின்சார கட்டணம் கணக்கெடுக்கும் பணிக்கு வந்தது போல் வீட்டுக்குள் நுழைவான்.

பின்னர் வீட்டில் தனியாக உள்ள பெண்களை குறிவைத்து தான் மறைத்து வைத்திருக்கும் சைக்கிள் செயின் மற்றும் சிறிய கடப்பாரையால் அவர்கள் உயிரிழக்கும் வரை  தலையில் தாக்கி பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்வான்.

இதே போன்று இதுவரை 5 பெண்களை கொலை செய்துள்ளான். மேலும் இவனது தாக்குதலில் ஏராளமான பெண்கள் பலத்த காயமடைந்துள்ளனர். கொலை செய்த பெண்களின் வீட்டில் எதுவும் திருடுவதில்லை. எனவே இவன் சைக்கோ கொலையாளியாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close