மோடியை பாராட்டினார்: கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்!

  ஸ்ரீதர்   | Last Modified : 04 Jun, 2019 01:35 pm
congress-expels-kerala-leader-ap-abdullakutty-for-praising-pm-narendra-modi

பிரதமர் நரேந்திர மோடியை புகழந்து பேசிய கேரள மாநில காங்கிரஸ் தலைவர் அப்துல்லாகுட்டி அக்கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல்லாகுட்டி, சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் அபிரிமித வெற்றிக்கு மோடிதான் காரணமென தனது முகநூலில் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து வந்தார்.

இதை காங்கிரஸ் கட்சி பல முறை கண்டித்துள்ளது. ஆனாலும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை.

இந்நிலையில் கேரள காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமசந்திரன் அப்துல்லாகுட்டியை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.

முன்னதாக கடந்த 2009ஆம் ஆண்டு அப்துல்லாகுட்டி கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டு வந்தார். அப்போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில், குஜராத் மாநிலத்தில் அப்போதைய முதல்வராக பணியாற்றி வந்த நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் வளர்ச்சிப்பணிகளை பாராட்டி பேசினார்.

அதுமட்டுமின்றி, அத்தகைய செயல்பாடுகள் தான்  கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்கு தற்போதைய தேவை என்று அந்த தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

இதையடுத்து கம்யூனிஸ்டு கட்சி அவரிடம் விளக்கம் கேட்டது. அதையடுத்து, அவர் கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close