ஜம்மு காஷ்மீர்- தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பெண் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Jun, 2019 10:46 am
woman-killed-youth-injured-after-being-fired-upon-by-terrorists-in-pulwama

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி எல்லையோர கிராமங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துகின்றனர்.

இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புல்வாமா மாவட்டம் காகபோராவில் உள்ள நர்பல் என்ற கிராமத்தில் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் ஒரு பெண் உள்பட இளைஞர் ஒருவர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த இந்திய படையினர் காயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close