டெல்லி- தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கார் மோதி 17 பேர் படுகாயம்

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Jun, 2019 12:38 pm
17-injured-in-delhi-as-car-rams-into-people-offering-namaaz

டெல்லியில் ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

கிழக்கு டெல்லியில் உள்ள குரேஜி பகுதியில் ரம்ஜானை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஈத் மைதானம் அருகே தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பாேது அந்த வழியாக தறிகெட்டு வந்த கார் கூட்டத்தினர் மீது தாறுமாறாக மோதியது. இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 17 பேர் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கார் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close