காதலித்ததால் மகளை கொலை செய்த தந்தை

  ஸ்ரீதர்   | Last Modified : 06 Jun, 2019 12:18 pm
up-man-drugs-throws-22-year-old-daughter-in-canal-arrested

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காதலித்தற்காக மகளுக்கு போதை மருந்து கொடுத்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பராய் என்ற கிராமத்தை சேர்ந்த 22 வயது பெண் அப்பகுதியை சேர்ந்த அர்ஜீன் என்ற வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது காதலியை 2 நாட்களாக காணவில்லை என்று அர்ஜீன் சபார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அந்த பெண்ணின் தந்தையான விர்பால் என்பவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது தனது மகளை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். மேலும் தனது மகள் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் தனது குடும்ப மானம் போனது என்றும், அதனால் ஆத்திரத்தில் மகளுக்கு போதை மருந்து கொடுத்து வாய்க்காலில் வீசி கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close