மருத்துவரின் மனைவியை கொலை செய்த நோயாளி கைது

  ஸ்ரீதர்   | Last Modified : 07 Jun, 2019 03:42 pm
man-kills-his-doctor-s-wife-injures-son

மத்திய பிரதேச மாநிலத்தில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மருத்துவரின் மனைவியை கொலை செய்த நோயாளி கைது செய்யப்பட்டார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ரஷீது என்பவர் தோல் தொடர்பான நோய்க்கு வர்மா என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். நீண்ட நாள் சிகிச்சைக்கு பின்னரும் ரஷீதுக்கு நோய் குணமாகவில்லை.

இந்நிலையில் ரஷீது மருத்துவரின் விட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவர் வர்மாவின் மனைவி மற்றும் மகன் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். மருத்துவரின் மனைவி ரஷீதிடம் பிறகு வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ரஷீது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவரின் மனைவியை குத்தியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவரின் மகன் ரஷீதை பிடிக்க முயன்றுள்ளார்.

இதனால் அவரையும் ரஷீது  கத்தியால் குத்தியுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மருத்துவரின் மனைவி உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் ரஷீதை கைது செய்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close