பஞ்சாப்- தீவிபத்தில் பெரும் சேதம்

  ஸ்ரீதர்   | Last Modified : 07 Jun, 2019 03:44 pm
50-shops-burned-down-in-fire-in-anandpur-sahib

பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் கோடிக்கணக்கான மதிப்புடைய பொருள்கள் சேதமடைந்தன.

பஞ்சாப் மாநிலத்தில் அனந்தபூர் சாஹிப் மார்க்கெட் பகுதியில் உள்ள ஓர் கடையில் இன்று காலை மின் கசிவு ஏற்பட்டு, அதன் காரணமாக தீ பரவியது. காற்று பலமாக வீசியதால் தீ அடுத்தடுத்த கடைகளுக்கு வேகமாக பரவியது.

இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 10 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தாக அங்குள்ள கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 2 லாரிகள் உள்பட 8 வாகனங்கள் தீயில் சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close