7வது நபருக்கும் நிபா வைரஸ் தாக்கிய அறிகுறிகள் இல்லை- புனே ஆய்வகம் தகவல்

  ஸ்ரீதர்   | Last Modified : 07 Jun, 2019 04:43 pm
seventh-patient-tests-negative-for-nipah-in-kerala

கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர் என்று சந்தேகப்பட்ட 7வது நபருக்கும் அந்த வைரஸ் தாக்கிய அறிகுறிகள் இல்லை என்று புனேவில் உள்ள ஆய்வகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு  முன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தனியறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நிபா வைரஸ் தாக்கியதாக கருதப்பட்ட 6 பேரின் ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் சோதித்தனர். அதில் அவர்களுக்கு நிபா வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை.

இந்நிலையில் 7வது நபரின் ரத்த மாதிரியை சோதித்த புனே ஆய்வகம் அவருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இல்லை என அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close